காணாத நூல்கள் - 2
கிருமி சிந்தாமணியும் குண தீட்சை மர்மமும் கொரோனா காலத்தில் ஒரு சந்தேகம். கிருமி நோய்கள் பற்றி சித்த மருத்துவ நூல்களில் மருத்துவம் கூறினாலும். தனி நூல் உள்ளதா என்று ஒரு சந்தேகம். ஆம் உள்ளது. கிருமி சிந்தாமணியும் குண தீட்சை மர்மமும் 1909 இல் குஞ்சி பண்டிதர் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. எங்கு உள்ளது? யாருக்கு தெரியும் பல நூல் நிலையங்கள் சென்றும் இப்படி ஒரு நூல் எனக்கும் கிடைக்கவில்லை. பாவம் சித்த மருத்துவ வல்லோருக்கும் கிட்டவில்லை. இந்நூலில் என்ன தகவல் இருக்கும் என்பதும் தெரியவில்லை. இந்த நூல் இருந்திருந்தால் தொற்று காலத்தில் பயன்பட்டிருக்குமோ? இருக்கலாம். நீங்கள் இந்த நூலை கண்டால் கையோடு கொண்டு வாருங்கள். இது siddha microbiology என்ற துறைக்கு கூட நம்மை அழைத்து செல்லலாம். நன்றி உங்கள் அன்பு மருத்துவன் இரா. சண்மு