சித்த மருத்துவத்தில் எண்களின் முக்கியத்துவம்
சித்த மருத்துவத்தில் எண்களின் முக்கியத்துவம் சித்த மருத்துவத்தில் சில முக்கிய எண்களை திரும்பத் திரும்ப நாம் கேள்விப்பட்டிருப்போம். 8 32 64 96 உதாரணமாக எட்டுக்கு எண்வகை தேர்வு அட்டாங்க யோகம் எண்பெரும் சித்திகள் முப்பத்திரண்டு உள்மருந்து 32 வெளிமருந்து 32 அறுபத்து நான்கு 64 வகை யோகம் 64 வகை சித்தி 64 கலைகள் தொண்ணூற்றாறு 96 தத்துவம் 96 தொடுவர்மம் ஏன் இந்த எண்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. இவையெல்லாம் வகைப்படுத்தியது யார் என்று பார்த்தால் சித்தர்கள்,யோகிகள் முனிவர்கள், ரிஷிகள் போன்றவர்கள். ஒரு விடயத்தை பாமரர் வரை புரிய வைக்க அவர்களுக்கு புரியும் சொல்லோ, பொருளோ கொண்டு உணர்த்த வேண்டியுள்ளது. அவ்வாறு மக்கள் அனைவரிடமும் இருக்கும் ஒரே பொருள் அவர்களுக்கு இயற்கை அளித்த அந்த உடல். மேலும், சித்தர்கள் உடம்புக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள். உதாரணமாக, திருமூலர், உடம்மை ஊர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்று கூறுகிறார். கண்களால் காணக்கூடிய ஒன்றை கொண்டு காணமுடியாததை கருதல் என்னும் அளவை மூலம் அறிய அறிவிக்க உதித்தது தான் இந்த எண்கள். இந்த பகுதியில் எட்டை மட்டும் எடுத்து கொள்வோம...