Posts

Showing posts from November, 2020

சித்த மருத்துவ கனவுகளும் ,சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியில் இதழ்களும்

கனவு காணுங்கள் திட்டமிடுங்கள் செயல்படுத்துங்கள் என்னும் அப்துல் கலாமின் மொழிகள் எவராலும் மறக்க முடியாது.அவருடைய கனவாகிய "இந்தியா வல்லரசு நாடு" அனணவர் மனதிலும் பதிந்த ஒரு பதிவு. அனைவருடைய கனவும் அதுவே.  அவர் இல்லை என்றாலும் அவருடைய கனவு எல்லாருடைய மனதிலும் ஆழ்ந்து ஊன்றி உள்ளது. அப்துல்கலாம் நாட்டுக்காக கண்ட கனவைப் போல் சித்த மருத்துவத்திற்காக யாரும் கனவு காணவில்லையா? என்ற கேள்விக்கு சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சி பதில் அளிக்க முன்வந்துள்ளது.               ஒரு துறையின் வளர்ச்சி பற்றிய செய்திகளை சேகரிக்க அத்துறை சார்ந்த இதழ்கள் மிகவும் பயன்படுகிறது. அவ்வாறு சித்த மருத்துவ முன்னோடிகள் கண்ட கனவுகளை இதழகள்(magazines) வாயிலாக சேகரித்து செயல்படுத்த வேண்டிய சூழ் நிலையில் இருக்கக்கூடிய நாம்,...2030ல் சித்த மருத்துவம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று புதிது புதிதாக கனவு காணும்படியாக போட்டிகள் நடப்பதாக முகநூலில் கண்ட ஒரு ஞாபகம்.               நிலவில் ரசம் கந்தகம் தேடுதல் வேட்டை;நின்றால் சித்த மருத்துவம்; நடந்தால் சித்த மருத்துவம்;பறந்தால் சித்த மருத்துவம்; நாசாவின் பக்கத்து தெருவிலே சித்த