Posts

Showing posts from July, 2021

மருத்துவ காலநெறி ஆராய்ச்சி

Image
  மருத்துவ ஜோதிடம் 2 (மருத்துவ காலநெறி ஆராய்ச்சி) சித்த மருத்துவம் மூடநம்பிக்கைகளை அழித்து உண்மை இயற்கை இயக்கங்களை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையது. விஞ்ஞானம் இயற்கை ஆராயும் வகையில் வேறு யாராலும் ஆராய இயலாது.ஆனால் மெய்ஞ்ஞானம் இயற்கை என்னவென்று ஆராய்ந்து முடித்தது.அதில் ஒன்றுதான் ஜோதிடம். நிலையான ஒன்றை ஆராய்வது மெய்ஞானம் நிலையற்றவை ஆராய்வது விஞ்ஞானம் என்பது அனைவருக்கும் தெரியும். சித்த மருத்துவம் விஞ்ஞானத்தில் விளக்க இயலாத பல விந்தையை வைத்துள்ளது. அதில் ஒன்று தான் காலம்  இந்த தலைப்பு ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானது. சோதிடம் என்பதற்கு பதில் காலநெறி என்ற சொல் உங்களுக்கு விளக்க ஏதுவாக இருக்கும். அகத்தியர் தன் ஞான பாடல் ஒன்றில், மாடு தான் என்றாலும் ஒரு போக்கு உண்டு. மனிதருக்கும் அப்படியும் கிடையாதப்பா என்று கூறுகிறார். இது நெறி என்னும் கோட்பாடுக்கு எடுத்துக்காட்டு. மாடு காலையில் எழுந்து புல்லினை மேய்ந்து வீடு திரும்பும்.இது அதன் போக்கு அல்லது நெறி என்று கூறலாம்.இதன் மூலம் மாடு நாளை என்ன செய்யும் என்பதை கணிக்கலாம். இது போன்ற ஒரு அறிவு தான் "கால நெறி". சூரியன் இன்னும் 10 மணிநேரத்தில்

Siddha literary research in siddha politics -1

 TKDL சித்தர்களின் பாடல்களை பயன்படுத்தி அரசியல் கட்சி தோன்றிய வரலாறு உள்ளது இன்று சித்த மருத்துவத்தை வைத்து அரசியல் (அதாவது இங்கு கூறப்படும் பொருள் சித்த மருத்துவத்தை பற்றி அறியாமையால் நடக்கும் நிகழ்ச்சிகள்). Tkdl என்ற அறிவுகூடம் பற்றியது தான் இன்றைய பதிவு. சித்த மருத்துவர்கள்,தாவரவியல் வல்லுநர்,தொல்பொருள் ஆய்வாளர்,ஓலைச்சுவடி ஆய்வாளர்,தாது பொருள் ஆய்வாளர்,மருந்து உற்பனம் செய்வோர் மற்றும் ஒவ்வொரு தமிழரும்,தினம் தினம் சென்று பார்க்க வேண்டிய வலைத்தளம் http://www.tkdl.res.in/tkdl/langdefault/common/Home.asp?GL=Eng Tkdl ஏன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் இந்திய நாட்டின் மிகப்பெரிய கொள்கை,.எந்த பண்பாட்டு பொருளும் தனி நபரின் பொருளாக கூடாது.அது அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதே அக்கொள்கை. அதை செவ்வனே செய்ய வேண்டிய பொறுப்பு tkdl சார்ந்தது. இது ministry of Ayush மற்றும் csir என்னும் இரு அரசு நிறுவனங்கள் கீழ் செயல்படுகிறது. இதன் முக்கிய வேலை. 1.siddha,ayurveda,unani,yoga,sowa Rigpa ஆகிய மருத்துவ முறைகளின் பாரம்பரிய முறைகளை தனியார் நிறுவனம் உரிமை கொண்டாடுவதை தடுப்பது. 2.இதில் உள்ள

siddha literary research in siddha politics

Image
  பல வருடங்களாக இருந்த ஒரு மிகப்பெரிய சந்தேகம். தினம் தினம் சித்த மருத்துவத்துக்கு என்று பல பிரச்சனைகள் வந்தவண்ணம் இருப்பதை கடந்த ஆறு வருடமாக சந்தித்து வந்த வண்ணம் உள்ளேன்.சமூக ஊடகங்களில் சித்த மருத்துவத்தை போலி மருத்துவம் என்று பரப்புரை செய்யும் தனிநபர் செயல்கள்,போலி மருத்துவர்கள் ஒரு புறம்,சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என்று கூறும் மீடியா ஒரு புறம்,அலோபதி மருத்துவர்களின் தவறான பரப்புரை,சித்த மருத்துவத்திற்கு பெரிய ஆராய்ச்சி நிறுவனம் இல்லாதது,அரசு வேலைக்காக காத்திருந்து ஓய்ந்து போன மருத்துவர்கள்,ஆயுர்வேத நிறுவனங்கள் சித்த மருத்துவம் மற்றும் வற்ம மருத்துவத்தை அபகரிக்கும் முயற்சி ,நூல்கள் மற்றும் வற்ம அறிவை வெளிநாட்டுக்கு விற்கும் சித்த மருத்துவர்கள்,சித்த மருத்துவ மருந்தை ஆயுர்வேத பொருள் என்று வணிக நிறுவனம் கண்முன்னமே விற்கும் நிலை, இவையெல்லாம் தடுக்க சித்த மருத்துவ ஆளுமைகள் அல்லது சித்த மருத்துவ நிறுவனங்கள் இல்லையா என்பது என் கேள்வி அல்ல. இவை நடக்க சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சி இல்லாததும் தான் மிகப்பெரிய காரணம் என நான் கண்டுபிடித்த சில விடயங்களை காலத்தின் கட்டளை கருதி &quo