Posts

Showing posts from 2021

காலத்துக்கு பதில் கூறும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சி -1

       அனைவருக்கும் கண்டாரை நோக்கிக் கருத்தோடு நில்லாதவனின் சித்தர்கள் தின நல்வாழ்த்துக்கள் .         இன்று சித்தர் தினம் பல்வேறு சித்த மருத்துவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.         இதில் எனக்கு உண்டான கேள்வி          1.சித்தர்கள் இதனை என்ன கண்ணோட்டத்தில் காண்பார்கள்?.         2.சித்தர் தின கொண்டாட்டத்தை விரும்புகிறார்களா இல்லையா? என்பதுதான் எனது கேள்வி.         முதலில் சித்தர்கள் இக்காலகட்டத்தில் இருக்கிறார்களா? என்பதை அறிவது முக்கியம் . அவர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்று காரைச் சித்தர் பாடலில் கூறியுள்ளார்.                 "பூரணர்கள் மறைந்துள்ளார் அவரை காணே"                   அதாவது சித்தர்கள் போன்ற மனிதர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக மக்களோடு இருப்பார்கள். அவர்களை நம் உண்மையான தேடலின் மூலமாக அறிந்து கொள்ள வேண்டும்.                   மேலும் காரைச் சித்தர்,                   "தூய நெறி காட்டி நின்றார் சித்தர் சித்தர்"                                                                                                    என்று கூறுகிறார்.            

Drug and cosmetics act siddha books to download

Image
  As a kind request from my friends circle, i wish to upload these books in this blog in favour of all doctors and pg scholars as these books are now authenticated to go for further research. I am clear that the books uploaded are non copyrighted.And i wish all my friends to buy all these books and  these books are now for sale in bookshops also. Thank u, Here is a video to understand the siddha books of drug and cosmetics act. U can download the books by clicking the name of the book.After clicking you have been redirected to new page and now u can download it easy and save for further research purpose. 1. agathiar pin 80   2. agathiar chendooram 300 3. agathiar and nagamuni nayanavithi 4. agathiar kanmasoothiram 150 5. agathiar vaithiya vallathi 600 6. agathiar vaithya kandam 600 7. agathiar vaithiya kaviyam 1500 8. athmarakshamrutham 9. balavagadam 10. bogar vaithiyam 700 11. brahmamun karukiddai soothiram 380 12. agathiar paripooranam 400 13. periya vathiya chillarai kovai 14. puli

மருத்துவ காலநெறி ஆராய்ச்சி

Image
  மருத்துவ ஜோதிடம் 2 (மருத்துவ காலநெறி ஆராய்ச்சி) சித்த மருத்துவம் மூடநம்பிக்கைகளை அழித்து உண்மை இயற்கை இயக்கங்களை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையது. விஞ்ஞானம் இயற்கை ஆராயும் வகையில் வேறு யாராலும் ஆராய இயலாது.ஆனால் மெய்ஞ்ஞானம் இயற்கை என்னவென்று ஆராய்ந்து முடித்தது.அதில் ஒன்றுதான் ஜோதிடம். நிலையான ஒன்றை ஆராய்வது மெய்ஞானம் நிலையற்றவை ஆராய்வது விஞ்ஞானம் என்பது அனைவருக்கும் தெரியும். சித்த மருத்துவம் விஞ்ஞானத்தில் விளக்க இயலாத பல விந்தையை வைத்துள்ளது. அதில் ஒன்று தான் காலம்  இந்த தலைப்பு ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானது. சோதிடம் என்பதற்கு பதில் காலநெறி என்ற சொல் உங்களுக்கு விளக்க ஏதுவாக இருக்கும். அகத்தியர் தன் ஞான பாடல் ஒன்றில், மாடு தான் என்றாலும் ஒரு போக்கு உண்டு. மனிதருக்கும் அப்படியும் கிடையாதப்பா என்று கூறுகிறார். இது நெறி என்னும் கோட்பாடுக்கு எடுத்துக்காட்டு. மாடு காலையில் எழுந்து புல்லினை மேய்ந்து வீடு திரும்பும்.இது அதன் போக்கு அல்லது நெறி என்று கூறலாம்.இதன் மூலம் மாடு நாளை என்ன செய்யும் என்பதை கணிக்கலாம். இது போன்ற ஒரு அறிவு தான் "கால நெறி". சூரியன் இன்னும் 10 மணிநேரத்தில்

Siddha literary research in siddha politics -1

 TKDL சித்தர்களின் பாடல்களை பயன்படுத்தி அரசியல் கட்சி தோன்றிய வரலாறு உள்ளது இன்று சித்த மருத்துவத்தை வைத்து அரசியல் (அதாவது இங்கு கூறப்படும் பொருள் சித்த மருத்துவத்தை பற்றி அறியாமையால் நடக்கும் நிகழ்ச்சிகள்). Tkdl என்ற அறிவுகூடம் பற்றியது தான் இன்றைய பதிவு. சித்த மருத்துவர்கள்,தாவரவியல் வல்லுநர்,தொல்பொருள் ஆய்வாளர்,ஓலைச்சுவடி ஆய்வாளர்,தாது பொருள் ஆய்வாளர்,மருந்து உற்பனம் செய்வோர் மற்றும் ஒவ்வொரு தமிழரும்,தினம் தினம் சென்று பார்க்க வேண்டிய வலைத்தளம் http://www.tkdl.res.in/tkdl/langdefault/common/Home.asp?GL=Eng Tkdl ஏன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் இந்திய நாட்டின் மிகப்பெரிய கொள்கை,.எந்த பண்பாட்டு பொருளும் தனி நபரின் பொருளாக கூடாது.அது அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதே அக்கொள்கை. அதை செவ்வனே செய்ய வேண்டிய பொறுப்பு tkdl சார்ந்தது. இது ministry of Ayush மற்றும் csir என்னும் இரு அரசு நிறுவனங்கள் கீழ் செயல்படுகிறது. இதன் முக்கிய வேலை. 1.siddha,ayurveda,unani,yoga,sowa Rigpa ஆகிய மருத்துவ முறைகளின் பாரம்பரிய முறைகளை தனியார் நிறுவனம் உரிமை கொண்டாடுவதை தடுப்பது. 2.இதில் உள்ள

siddha literary research in siddha politics

Image
  பல வருடங்களாக இருந்த ஒரு மிகப்பெரிய சந்தேகம். தினம் தினம் சித்த மருத்துவத்துக்கு என்று பல பிரச்சனைகள் வந்தவண்ணம் இருப்பதை கடந்த ஆறு வருடமாக சந்தித்து வந்த வண்ணம் உள்ளேன்.சமூக ஊடகங்களில் சித்த மருத்துவத்தை போலி மருத்துவம் என்று பரப்புரை செய்யும் தனிநபர் செயல்கள்,போலி மருத்துவர்கள் ஒரு புறம்,சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என்று கூறும் மீடியா ஒரு புறம்,அலோபதி மருத்துவர்களின் தவறான பரப்புரை,சித்த மருத்துவத்திற்கு பெரிய ஆராய்ச்சி நிறுவனம் இல்லாதது,அரசு வேலைக்காக காத்திருந்து ஓய்ந்து போன மருத்துவர்கள்,ஆயுர்வேத நிறுவனங்கள் சித்த மருத்துவம் மற்றும் வற்ம மருத்துவத்தை அபகரிக்கும் முயற்சி ,நூல்கள் மற்றும் வற்ம அறிவை வெளிநாட்டுக்கு விற்கும் சித்த மருத்துவர்கள்,சித்த மருத்துவ மருந்தை ஆயுர்வேத பொருள் என்று வணிக நிறுவனம் கண்முன்னமே விற்கும் நிலை, இவையெல்லாம் தடுக்க சித்த மருத்துவ ஆளுமைகள் அல்லது சித்த மருத்துவ நிறுவனங்கள் இல்லையா என்பது என் கேள்வி அல்ல. இவை நடக்க சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சி இல்லாததும் தான் மிகப்பெரிய காரணம் என நான் கண்டுபிடித்த சில விடயங்களை காலத்தின் கட்டளை கருதி &quo

மருத்துவ சோதிடம் -1

Image
காலநெறி யாது உரைப்பேன் கேளாய் கேளாய் இந்தக் காலம் அது அது கொரோனா காலம். இக்காலத்தில் சித்த மருத்துவர்களிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி "எப்ப சார் கொரோனா முடியும் ?" . இதற்கு தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கணிப்புகளை முன்மொழிந்து உள்ளனர்.உதாரணமாக ஐஐடி ஐ சேர்ந்தவர்கள் கோரோனா மே மாத மத்தியில் உச்சநிலையை அடையும் என்று கூறியுள்ளனர். மேலும் ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தை  சேர்ந்த கௌதம் மேனன் என்னும் ஆராய்ச்சியாளர் ஏப்ரல்,மே மத்தியில் உச்சகட்டத்தை அடைந்து, மே மாத இறுதியில் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளும் என்று கணித்துள்ளனர். இவையெல்லாம் சில தரவுகளின் அடிப்படையிலும் கணித அடிப்படையிலும் கணித்த கணிப்பாகும்.  ஆனால், சித்தர்களோ 64 கலைகளை அறிந்தவர்கள் என்று பாம்பாட்டி சித்தர் கூறியுள்ளார். "அறுபத்து நான்கு கலைகள் தானுமறிவோம்  அதற்குமேல் ஒரு கலையானது அறிவோம்." 64 கலைகளில் மருத்துவம், ஜோதிடம் கணிதம் ஆகியவை இடம்பெறும்.இக்கலைகள் அறிந்த சித்தர்களின் கணிப்பு நிச்சயமாக முக்கியத்துவம் வாய்ந்தது. சித்த மருத்துவம் கொரோனா நோயின் குறிகுணங்களைக் கொண்டு அது உடலின் நீர்த்துவதில் மாற்ற

அறிவர் மருத்துவத்தில் நாடி -1

Image
அறிவர் மருத்துவத்தில் நாடி (Pulse diagnosis in siddhar's medicine)                         நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்கும் பொழுது சித்தமருத்துவம் செய்கிறேன் என்று கூறினால் போதும் நாடி பார்க்க தெரியுமா? என்பது அடுத்ததாக வரும் கேள்வி.அப்படி சித்தமருத்துவரை அடையாளம் காட்டுவதாக நாடி உள்ளது. அந்த நாடி பார்ப்பதை மாயாவி வித்தையாக பலர் கருதுகின்றனர். நாடி பார்ப்பது அறிவுகலை சார்ந்தது.நாடியில் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளது என்பது பொது மக்களுக்கு தெரிந்தால் தான் அது எவ்வளவு நுணுக்கமானது என்பது புரியும். நாடி பார்க்க மருத்துவரை நாடி வருவர். அப்பேற்பட்ட நாடியில் இருக்கும் பல்வேறு பிரிநிலைகளை நூல்கள் ஆராய்ச்சி மூலம் வெளிப்படுத்துவதே இப்பதிவின் நோக்கமாக கொண்டு வெளிப்படுத்துகிறோம். நாடி பார்ப்பதில் பல்வேறு பாரம்பரியங்கள் இருப்பதாக தோன்றுகிறது. பொதுவாக அனைவரும் அறிந்தது கரநாடியை பிடித்து மூன்று பிரிவாக பிரித்து அதை வாதம் பித்தம் கபம் எனும் முத்தா துக்களை அறிந்து நோய் நிலையை கூறுவது. ஆனால் சித்த மருத்துவம் இதோடு முடிந்துவிடவில்லை. அது பல்வேறு கூறுகளாக நாடி பரிசோதனையை கொண்டு

கண்ணடைப்பான் -ஒரு சிறு ஆராய்ச்சி.case documentation in siddha medicine

Image
சித்த மருத்துவம் படிக்கும் அனைவருக்கும் இருக்கும் சில புரியாத சந்தேகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் *சித்த மருத்துவம் எப்படி உருவானது?*  சித்த மருத்துவத்தில் 4448 நோய்கள் உள்ளன என்றும் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குணங்கள் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன என்று சித்த மருத்துவ நூல்களை படித்தவர்களுக்கு தெரியும். இப்படி ஒவ்வொரு நோய்க்கும் பெயர் வைத்து விளக்கப்பட வேண்டுமானால் இது பல நூற்றாண்டுகளாக வளர்ந்த ஒரு மருத்துவமுறையாக இருந்திருக்கவேண்டும். இப்பொழுது who, international classification of diseases(ICD) என்ற முறையின் கீழ் நோய்களை வகைப்படுத்தியுள்ளது அதுவும் குறிப்பிட்ட சில நோய்களுக்கு மட்டுமே. இப்படி இருக்க சித்த மருத்துவத்தில் மட்டும் எப்படி 4448 நோய்கள் குறிகுணங்களோடும் பெயர்களுடனும் பிரித்து சித்தர்கள் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பது ஒரு சந்தேகமாக பலநாள் உள்ளது. ஒரே ஒரு சித்தர் மட்டுமே இவற்றை வகைப்படுத்தி உள்ளாரா? என்பது போன்ற கேள்விகள் எழுந்தது. இவற்றுக்கு விடை அளிப்பது தான் இந்த பதிவு. நம் ஊர்களில் சில கோயில்களில் நேர்த்திகடனாக கண்மலர் பயன்படுத்தி பார்திருப்பீர். அதுமட்டுமல்லாமல் ஒரு