Posts

Showing posts from October, 2020

அனுபவ அறிவும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும்-1

Image
             மருத்துவத்துறையை பொருத்தமட்டில் நூல்களும் அனுபவமும் இரு கண்கள் ஆகும்.                      மருத்துவ முன்அனுபவம் இல்லாமல் சில பாடல்களை பொருள் புரிந்து கொள்வது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் பொருள் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. அனுபவ அறிவு நூல்கள் ஆராய்ச்சிக்கு எவ்வளவு பயன்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.  உதாரணமாக, கீழ்க்கண்ட  அகத்தியர் நயனவிதி பாடலை காணலாம். " கூசும் விழியும் புகைந்திருக்கும் குறுகும் பார்வை தோற்றாது மாசுங் கண்ணும் பசித்திருக்கும் மயக்குங் குணங்கள் பலவாகும்  தேசுங் குறையு மருட்சியுண்டாம் திறமாய்க் கருமம் செய்யாது  ஏசுங் குணங்கள் வெள்ளெழுத்து என்றே சொல்லு இவை கண்டே."    இப்பாடலில் முதல் வரி நமக்கு ஆழ்ந்த பொருளினை தரப்போகிறது.        முதல் வரியினை மூன்று விதமாக பிரித்து பொருள்  எடுத்துக் கொள்ளலாம்.  ஒன்று (கூசும் விழியும் புகைந்திருக்கும் குறுகும்) பார்வை தோற்றாது. இதன் பொருள்: கண்கள் கூசும்,  கண் புகைந்து காட்டும், கண்குறுகும் ( shrinkage of eyes ,may be pthsis bulbi) பார்வை தெரியாது. இரண்டு கூசும் விழியும் புகைந்திருக்கும் ( கு

சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும் சித்த மருத்துவ ஆராய்ச்சியும் -1

Image
                          சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியே.  சித்தர்களின் பழம்பெரும் கலைகள் அவற்றின் பெருமைகள் இவற்றுள் எஞ்சியவை, நம் கையில் மிஞ்சியவை இந்நூல்களே. நமக்கு இருக்கும் ஒப்பற்ற பாரம்பரிய அறிவை மற்றும் ஆராய்ச்சியை பறைசாற்றுவது இந்நூல்களே. இந்நூல்களின் அடிப்படைகளை விட்டு ஒருவன் செய்யும் ஆராய்ச்சி சித்த மருத்துவ ஆராய்ச்சி என்று எடுத்துக் கொள்ளப்படாது. ஏனெனில் சித்த மருத்துவ ஆராய்ச்சி, சித்தர்களின் மருத்துவம் ஆகிய சித்த மருத்துவத்தில் மட்டுமே செய்யக்கூடியதாக உள்ளது. அந்த சித்த மருத்துவம் நூல்களாகவும் அனுபவ அறிவாகவும் உள்ளது. மற்றைய ஆராய்ச்சிகள் போல சித்த மருத்துவ ஆராய்ச்சி செய்ய இயலாது. இதில் முதல்படியாக நூல்கள் ஆராய்ச்சியும் ,அதன் வளர்ச்சியாக மருந்துகளின் ஆராய்ச்சியும் அமைவது சிறப்பு. ஆராய்ச்சிக்கு சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் என்பதை இனி வரும் பதிவுகளில் காணலாம்.      மேலும், இதுவரை சித்த மருத்துவ ஆராய்ச்சியில் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சி இல்லாததால் ஏற்பட்ட தவறான ஆராய்ச்சி அறிக்கைகள்

சிவவாக்கியரும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும்-1

Image
        ஒரு சித்தரை பற்றி முழுமையும் அறிந்துகொள்ள அவர் இயற்றிய நூல்கள் நமக்கு கைகொடுக்கின்றன. அவ்வாறு இன்று சிவவாக்கியர்  பற்றி அறிய அவர் இயற்றிய நூல்கள் என்ன என்பது தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.இன்றைய காலகட்டத்தில் முழுமையான எந்த ஒரு ஆராய்ச்சியும் இல்லாமல் சித்தர்களைப் பற்றிய தவறான பல செய்திகள் முகநூலிலும் யூடியூப் போன்ற வலைதளங்களிலும் வெளிவந்து கொண்டுள்ளன. இந்தப்பதிவில் சிவவாக்கியர் இயற்றிய நூல்கள் என்னவென்று காண்போம்.  அனைவரும் அறிந்திருப்பது, சிவவாக்கியச் சித்தர் இயற்றிய ஞானயோக புரட்சி பாடல்கள்; பெரிய ஞானக் கோவையில் வெளிவந்த 520 பாடல்கள் மட்டுமே.அதைத் தாண்டி சில நூல்கள் வெளிவந்துள்ளன.அதை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 1.சிவவாக்கியர் பாடல்கள் 500 1927ஆம் ஆண்டு பெரிய ஞானக் கோவையில் ஒரு பகுதியாக சிவவாக்கியர் பாடல்கள் மொத்தம் 518 பாடல்களுடன் விளக்க உரை இன்றி வெளிவந்து உள்ளது. அதே  பெரிய ஞானக் கோவையின் 2016ஆம் ஆண்டு பதிப்பில் 550 சிவவாக்கியர் பாடல்கள்  வெளிவந்துள்ளது. அது போல 1933 ஆம் ஆண்டு மாங்காடு வடிவேலு முதலியார் அவர்களால் 519 பாடல்கள் * விளக்கவுரையுடன் * இரத்தின நாயக்

சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும் போட்டித் தேர்வுகளும்-1

Image
  சித்த மருத்துவ  பாடப்புத்தகள் 50 வருடங்கள் ஆகியும் புதுப்பிக்கபடாமல் அதில் உள்ள பிழைகள் திருத்தப்படாமல் இன்னும் சித்தமருத்துவ மாணவர்களால் படிக்கப்பட்டு வருகிறது.  இந்த சித்த மருத்துவ பாடப்புத்தகங்கள், classical text என்று சொல்லக்கூடிய சித்தர் இயற்றிய நூல்கள் அல்லாமல்  சித்த மருத்துவ மாமேதைகளால் பல சித்தர் நூல்களைத் திரட்டி எழுதப்பட்ட நூல்கள் ஆகும். எப்படிப்பட்ட பெரிய அறிவாளிகளாக இருந்தாலும் சிறு சிறு தவறுகள் நேர வாய்ப்புண்டு. அப்படி சித்தமருத்துவ பாடப்புத்தகங்களில் ஆங்காங்கு தவறுகள் இருப்பது வாடிக்கையானது. ஆனால் அது 50 வருடங்கள் ஆகியும் திருத்தப்படவில்லை என்பதே சோகமான ஒரு விஷயம். இப்படி திருத்தப்படாமல் இருக்கும் பாடபுத்தகங்களே சித்த மருத்துவ போட்டித் தேர்வுகளுக்கு அடிப்படையானது. நவீன வளர்ச்சியின் காரணமாக சித்த மருத்துவ பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் வெறும் விளக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சித்தமருத்துவ பாடல்களை ஆழ்ந்து படிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது.  சமீபத்தில் அகில இந்திய பட்டமேற்படிப்பு சித்தமருத்துவர் நுழைவுத்தேர்வு (AIAPGET) நட