Posts

Showing posts from January, 2023

சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும் நூல்கள் பதிப்பும் - 1

Image
அரசினர் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் உள்ள வற்ம நூல்கள்  அனைவருக்கும் இனிய சித்தர் தின நல்வாழ்த்துக்கள்.💐 சித்த மருத்துவத்தில் நூல்கள் பதிப்பு மிகவும் அவசியமானது. இன்று சித்த மருத்துவத்தின் பிரிவுகள் பல உருவாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் துறை சார்ந்த வளர்ச்சிக்கு நூல்களின் பின்புலம் மிகவும் அவசியமானது.  உதாரணமாக, வற்ம மருத்துவப் பிரிவில் உள்ள திலர்த காலம் பற்றிய புள்ளியை ஆய்வு செய்யும் ஒருவன் முதலில் திலர்த காலம் எந்தெந்த நூல்களில் பேசப்பட்டுள்ளது என்பதை மொத்தமாக தொகுத்த பின்னரே அதில் ஆராய்ச்சி செய்ய ஏதுவாக இருக்கும் .அப்படியானால் திலர்த காலம் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒருவன் வர்ம நூல்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும். அதற்கு முதலில் அந்த நூல்கள் வெளிவந்திருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் வெளிவந்த நூல்கள் வெளி வராத நூல்கள் என்ன என்பது பற்றிய அறிவு இருந்தால் தான் எந்தெந்த நூல்களை பதிப்பிக்க வேண்டும் எங்கே அந்த நூல்களை சென்று பெற வேண்டும் என்று தேட இயலும். வற்ம நூலகள் யாரும் தர மாட்டார்கள் என்று உட்கார்ந்த இடத்திலிருந்து கூவல் செய்யலாம். ஆனால் உண்மை சித்தர் பாடல்கள