Posts

Showing posts from December, 2021

காலத்துக்கு பதில் கூறும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சி -1

       அனைவருக்கும் கண்டாரை நோக்கிக் கருத்தோடு நில்லாதவனின் சித்தர்கள் தின நல்வாழ்த்துக்கள் .         இன்று சித்தர் தினம் பல்வேறு சித்த மருத்துவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.         இதில் எனக்கு உண்டான கேள்வி          1.சித்தர்கள் இதனை என்ன கண்ணோட்டத்தில் காண்பார்கள்?.         2.சித்தர் தின கொண்டாட்டத்தை விரும்புகிறார்களா இல்லையா? என்பதுதான் எனது கேள்வி.         முதலில் சித்தர்கள் இக்காலகட்டத்தில் இருக்கிறார்களா? என்பதை அறிவது முக்கியம் . அவர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்று காரைச் சித்தர் பாடலில் கூறியுள்ளார்.                 "பூரணர்கள் மறைந்துள்ளார் அவரை காணே"                   அதாவது சித்தர்கள் போன்ற மனிதர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக மக்களோடு இருப்பார்கள். அவர்களை நம் உண்மையான தேடலின் மூலமாக அறிந்து கொள்ள வேண்டும்.                   மேலும் காரைச் சித்தர்,                   "தூய நெறி காட்டி நின்றார் சித்தர் சித்தர்"                                                                                                    என்று கூறுகிறார்.