Posts

Showing posts from 2023

காணாத நூல்கள் - 2

கிருமி சிந்தாமணியும் குண தீட்சை மர்மமும் கொரோனா காலத்தில் ஒரு சந்தேகம். கிருமி நோய்கள் பற்றி சித்த மருத்துவ நூல்களில் மருத்துவம் கூறினாலும். தனி நூல் உள்ளதா என்று ஒரு சந்தேகம். ஆம் உள்ளது. கிருமி சிந்தாமணியும் குண தீட்சை மர்மமும் 1909 இல் குஞ்சி பண்டிதர் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. எங்கு உள்ளது? யாருக்கு தெரியும் பல நூல் நிலையங்கள் சென்றும் இப்படி ஒரு நூல் எனக்கும் கிடைக்கவில்லை. பாவம் சித்த மருத்துவ வல்லோருக்கும் கிட்டவில்லை. இந்நூலில் என்ன தகவல் இருக்கும் என்பதும் தெரியவில்லை. இந்த நூல் இருந்திருந்தால் தொற்று காலத்தில் பயன்பட்டிருக்குமோ? இருக்கலாம். நீங்கள் இந்த நூலை கண்டால் கையோடு கொண்டு வாருங்கள். இது siddha microbiology என்ற துறைக்கு கூட நம்மை அழைத்து செல்லலாம். நன்றி உங்கள் அன்பு மருத்துவன் இரா. சண்மு

காணாத நூல்கள் - 1

ரோமரிஷி ஏக மூலிகை வைத்தியம் - -500 சித்த மருத்துவத்தில் மறைந்த நூல்கள் பல. அதை மீட்க காணாத நூல்கள் பற்றி எழுத விழைகிறேன். அதில் முதல் ஒன்று 1.ரோமரிஷி ஏக மூலிகை வைத்தியம் - -500 சித்த மருத்துவத்தில் ஏக மூலிகை பிரயோகம் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. அதாவது ஒரே ஒரு மூலிகை வைத்து நோயை தீர்ப்பது. இதற்கான மூலநூல் தனியாக இல்லை என்பது சித்த மருத்துவ சமூகத்தின் நம்பிக்கை. ஆனால் நாம் அதற்கான நூல்களை தொலைத்து விட்டோம் என்பது தான் உண்மை.  ரோமரிஷி ஏக மூலிகை வைத்தியம் 500 என்ற ஏடு திருநெல்வேலி மாவட்டம் அத்வைதனானந்தர் என்பவரிடம் இருந்து ரீஜனல் ரிசர்ச் சென்டர், ஆயுர்வேதா பெங்களூரை சேர்ந்தவர்கள் சேகரித்து வைத்துள்ளனர்.இதில் மொத்தம் 205 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது.இந்நூல் பற்றி ஆர்.சுதா மற்றும் எச்.எஸ்.லட்சுமி நாராயணன் என்பவர்கள் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை 1990 இல் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி அரங்கு,திருவனந்தபுரத்தில் வெளியிட்டனர்.ஆனால் இந்த நூலின் தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை.  இந்த நூலின் சிறப்பு அம்சங்கள் சில 1.தனி மூலிகை தைலங்கள் 2.மூலிகை தைலங்களுடன் ஒன்று இரண்டு சரக்குகள் மட்டும் சேர்

சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும் நூல்கள் பதிப்பும் - 1

Image
அரசினர் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் உள்ள வற்ம நூல்கள்  அனைவருக்கும் இனிய சித்தர் தின நல்வாழ்த்துக்கள்.💐 சித்த மருத்துவத்தில் நூல்கள் பதிப்பு மிகவும் அவசியமானது. இன்று சித்த மருத்துவத்தின் பிரிவுகள் பல உருவாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் துறை சார்ந்த வளர்ச்சிக்கு நூல்களின் பின்புலம் மிகவும் அவசியமானது.  உதாரணமாக, வற்ம மருத்துவப் பிரிவில் உள்ள திலர்த காலம் பற்றிய புள்ளியை ஆய்வு செய்யும் ஒருவன் முதலில் திலர்த காலம் எந்தெந்த நூல்களில் பேசப்பட்டுள்ளது என்பதை மொத்தமாக தொகுத்த பின்னரே அதில் ஆராய்ச்சி செய்ய ஏதுவாக இருக்கும் .அப்படியானால் திலர்த காலம் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒருவன் வர்ம நூல்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும். அதற்கு முதலில் அந்த நூல்கள் வெளிவந்திருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் வெளிவந்த நூல்கள் வெளி வராத நூல்கள் என்ன என்பது பற்றிய அறிவு இருந்தால் தான் எந்தெந்த நூல்களை பதிப்பிக்க வேண்டும் எங்கே அந்த நூல்களை சென்று பெற வேண்டும் என்று தேட இயலும். வற்ம நூலகள் யாரும் தர மாட்டார்கள் என்று உட்கார்ந்த இடத்திலிருந்து கூவல் செய்யலாம். ஆனால் உண்மை சித்தர் பாடல்கள