Posts

Showing posts from April, 2021

மருத்துவ சோதிடம் -1

Image
காலநெறி யாது உரைப்பேன் கேளாய் கேளாய் இந்தக் காலம் அது அது கொரோனா காலம். இக்காலத்தில் சித்த மருத்துவர்களிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி "எப்ப சார் கொரோனா முடியும் ?" . இதற்கு தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கணிப்புகளை முன்மொழிந்து உள்ளனர்.உதாரணமாக ஐஐடி ஐ சேர்ந்தவர்கள் கோரோனா மே மாத மத்தியில் உச்சநிலையை அடையும் என்று கூறியுள்ளனர். மேலும் ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தை  சேர்ந்த கௌதம் மேனன் என்னும் ஆராய்ச்சியாளர் ஏப்ரல்,மே மத்தியில் உச்சகட்டத்தை அடைந்து, மே மாத இறுதியில் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளும் என்று கணித்துள்ளனர். இவையெல்லாம் சில தரவுகளின் அடிப்படையிலும் கணித அடிப்படையிலும் கணித்த கணிப்பாகும்.  ஆனால், சித்தர்களோ 64 கலைகளை அறிந்தவர்கள் என்று பாம்பாட்டி சித்தர் கூறியுள்ளார். "அறுபத்து நான்கு கலைகள் தானுமறிவோம்  அதற்குமேல் ஒரு கலையானது அறிவோம்." 64 கலைகளில் மருத்துவம், ஜோதிடம் கணிதம் ஆகியவை இடம்பெறும்.இக்கலைகள் அறிந்த சித்தர்களின் கணிப்பு நிச்சயமாக முக்கியத்துவம் வாய்ந்தது. சித்த மருத்துவம் கொரோனா நோயின் குறிகுணங்களைக் கொண்டு அது உடலின் நீர்த்துவதில் மாற்ற