மருத்துவ சோதிடம் -1
காலநெறி யாது உரைப்பேன் கேளாய் கேளாய்
இந்தக் காலம் அது அது கொரோனா காலம். இக்காலத்தில் சித்த மருத்துவர்களிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி "எப்ப சார் கொரோனா முடியும் ?". இதற்கு தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கணிப்புகளை முன்மொழிந்து உள்ளனர்.உதாரணமாக ஐஐடி ஐ சேர்ந்தவர்கள் கோரோனா மே மாத மத்தியில் உச்சநிலையை அடையும் என்று கூறியுள்ளனர்.
மேலும் ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தை
சேர்ந்த கௌதம் மேனன் என்னும் ஆராய்ச்சியாளர் ஏப்ரல்,மே மத்தியில் உச்சகட்டத்தை அடைந்து, மே மாத இறுதியில் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளும் என்று கணித்துள்ளனர்.
இவையெல்லாம் சில தரவுகளின் அடிப்படையிலும் கணித அடிப்படையிலும் கணித்த கணிப்பாகும்.
ஆனால், சித்தர்களோ 64 கலைகளை அறிந்தவர்கள் என்று பாம்பாட்டி சித்தர் கூறியுள்ளார்.
"அறுபத்து நான்கு கலைகள் தானுமறிவோம்
அதற்குமேல் ஒரு கலையானது அறிவோம்."
64 கலைகளில் மருத்துவம், ஜோதிடம் கணிதம் ஆகியவை இடம்பெறும்.இக்கலைகள் அறிந்த சித்தர்களின் கணிப்பு நிச்சயமாக முக்கியத்துவம் வாய்ந்தது.
சித்த மருத்துவம் கொரோனா நோயின் குறிகுணங்களைக் கொண்டு அது உடலின் நீர்த்துவதில் மாற்றங்களை ஏற்படுத்துவதால் அதை *கபநோய்* என கூறுகிறது.
பொதுவாக கபநோய்கள் மாசி, பங்குனி மாதத்தில் ஆரம்பித்து(இது தன்னிலைவளர்ச்சி) சித்திரை,வைகாசி மாதங்களில் தங்கள் வீரியத்தை அதிகப்படுத்தி, உடலின் எல்லா பாகங்களிலும் சென்று பாதிக்கும். இதனை கப பிறநிலை வளர்ச்சி என்று கூறுவர். உதாரணமாக கோரோனா கால்மூட்டுகளில் வலி வீக்கம், இதயக் கோளாறுகள்,மூலைக்கோளாறுகள் ஆகியவற்றை உண்டாக்கியது.(initially at its own site or system-தன்னிலை வளர்ச்சி,gradually reaches other site or system-பிறநிலை வளர்ச்சி)
மேலும் சித்த மருத்துவம் மார்கழி,தை மாதங்களில் நோய்கள் புதிதாக தோன்றுவது இல்லை என்றும், ஏற்கனவே உள்ள நோய்கள் தங்கள் வீரியத்தை குறைத்துக் கொள்ளும் என்றும் உடலின் தீயை மையமாகக் கொண்டும்,கிரகத்தின் நிலைமையும் கொண்டும்,காலத்தின் அடிப்படையில் கூறுகிறது.
சுருங்கக்கூறின்,கொரோனா
1.ஆரம்பம் -மாசி பங்குனி (பின்பனிக்காலம்)
2.உச்சநிலை- சித்திரை,வைகாசி (இளவேனில் காலம்)
3.இல்லாத நிலை- மார்கழி, தை (முன்பனிக்காலம்)
இவையெல்லாம் நம்முடைய இந்திய மண்ணுக்கு மட்டும் பொருந்தும்.
இதை நீங்கள் சென்ற வருட கொரோனா நோய்த்தொற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும்.சென்ற வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை கொரோனா தன் கோரத்தாண்டவத்தை வெளிப்படுத்தியது. இந்த வருடமும் அதே மாதங்களில் எழுச்சி பெற்று கொரோனா எழுந்துள்ளது.
இக்கணிப்புகளின் முக்கிய நோக்கம் என்னவென்றால் சித்தமருத்துவம் நோய் வருவதற்கு முன்பே அதனை தடுக்க சில முக்கியமான வரன் முறைகள் வைத்திருந்தது.அதில் ஒன்றுதான் மருத்துவ ஜோதிடம் அதை பயன்படுத்தி இனி வரும் நோய்களை அறிந்து கொண்டு நோய் வரும் முன்னரே மருத்துவம் எடுத்துக் கொண்டால் நிச்சயம் பெருவியாதிகளிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். இதை உறுதிப்படுத்த சித்தர்கள் பாடல்களை இங்கே தருகிறேன்.
காரைச் சித்தர் என்று கடந்த நூற்றாண்டை சேர்ந்த சித்தர் ஒருவர் தன் நூலில் இனிவரும் ஆயிரம் வருடங்களில் என்னவெல்லாம் நடக்க இருக்கின்றன என்பதை கணித்துள்ளார்.அதை பாடலாக வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தினமும் நோய் உண்டாகும் என்று கூறியுள்ளார். தற்போதைய சூழ் நிலையும் அதுவே.
கால நெறியாதுரைப்பேன் கேளாய் கேளாய் காணவரும் ஆயிரமாம் வருடத்துலே
-காரைசித்தர்
தீராத நோய்களெல்லாம் தினம் உண்டாகும்.
-காரைசித்தர்
மேலும் கடந்த நூற்றாண்டை சேர்ந்த முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டர் என்ற சித்தர் கூறியது
"வஞ்சப் பெரும் காற்றால் வையகத்தில் சஞ்சல நோய்"
"தீங்கான நோய் பெருகும் பான்மை வையகம் பாழாகும்."
என்று கூறியுள்ளார்
ஆகையால் முடிவாக காரைசித்தர் என்ன சொல்கிறார் என்றால்
தூய நெறி காட்டி நின்றார் சித்தர் சித்தர்
ஸ்தூல நெறி காட்டுகின்றார் ரத்தர் ரத்தர்
இக்காலங்களில் சித்தர்கள் தூய நெறி காட்டுவார்
அதாவது இயற்கைநெறி ,இயற்கையை அடிப்படையாய் கொண்ட விஞ்ஞானம்,ஆன்ம நெறி, சித்த மருத்துவம்,யோகம்,நன்னெறி ஆகியவற்றை காட்டுவர்.
ரத்தர் என்பவர்கள் கருணை இல்லாதார் அவர்கள் காட்டும் நெறி
உடலை அடிப்படையாய் கொண்டது,கண்ணுக்கு தெரியாத விஞ்ஞானத்தை எதிர்பார்,சித்த மருத்துவத்தை நம்பார்
கண்ணுக்கு தெரியாத முக்குற்றத்தை நம்பார், நாடி காணார்.
ஸ்தூல நெறி விட்டு
தூய நெறி பற்று
கோரோனா போகும் உன்னை விட்டு.👍
உங்கள் அன்பு மருத்துவன்,இரா.சண்மு
Comments
Post a Comment