காணாத நூல்கள் - 1
ரோமரிஷி ஏக மூலிகை வைத்தியம் - -500 சித்த மருத்துவத்தில் மறைந்த நூல்கள் பல. அதை மீட்க காணாத நூல்கள் பற்றி எழுத விழைகிறேன். அதில் முதல் ஒன்று 1.ரோமரிஷி ஏக மூலிகை வைத்தியம் - -500 சித்த மருத்துவத்தில் ஏக மூலிகை பிரயோகம் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. அதாவது ஒரே ஒரு மூலிகை வைத்து நோயை தீர்ப்பது. இதற்கான மூலநூல் தனியாக இல்லை என்பது சித்த மருத்துவ சமூகத்தின் நம்பிக்கை. ஆனால் நாம் அதற்கான நூல்களை தொலைத்து விட்டோம் என்பது தான் உண்மை. ரோமரிஷி ஏக மூலிகை வைத்தியம் 500 என்ற ஏடு திருநெல்வேலி மாவட்டம் அத்வைதனானந்தர் என்பவரிடம் இருந்து ரீஜனல் ரிசர்ச் சென்டர், ஆயுர்வேதா பெங்களூரை சேர்ந்தவர்கள் சேகரித்து வைத்துள்ளனர்.இதில் மொத்தம் 205 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது.இந்நூல் பற்றி ஆர்.சுதா மற்றும் எச்.எஸ்.லட்சுமி நாராயணன் என்பவர்கள் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை 1990 இல் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி அரங்கு,திருவனந்தபுரத்தில் வெளியிட்டனர்.ஆனால் இந்த நூலின் தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை. இந்த நூலின் சிறப்பு அம்சங்கள் சில 1.தனி மூலிகை தைலங்கள் 2.மூலிகை தைலங்களுடன் ஒன்று இரண்டு சரக்குகள் மட்...