காணாத நூல்கள் - 1

ரோமரிஷி ஏக மூலிகை வைத்தியம் - -500

சித்த மருத்துவத்தில் மறைந்த நூல்கள் பல.

அதை மீட்க காணாத நூல்கள் பற்றி எழுத விழைகிறேன்.

அதில் முதல் ஒன்று

1.ரோமரிஷி ஏக மூலிகை வைத்தியம் - -500

சித்த மருத்துவத்தில் ஏக மூலிகை பிரயோகம் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. அதாவது ஒரே ஒரு மூலிகை வைத்து நோயை தீர்ப்பது. இதற்கான மூலநூல் தனியாக இல்லை என்பது சித்த மருத்துவ சமூகத்தின் நம்பிக்கை. ஆனால் நாம் அதற்கான நூல்களை தொலைத்து விட்டோம் என்பது தான் உண்மை. 

ரோமரிஷி ஏக மூலிகை வைத்தியம் 500 என்ற ஏடு திருநெல்வேலி மாவட்டம் அத்வைதனானந்தர் என்பவரிடம் இருந்து ரீஜனல் ரிசர்ச் சென்டர், ஆயுர்வேதா பெங்களூரை சேர்ந்தவர்கள் சேகரித்து வைத்துள்ளனர்.இதில் மொத்தம் 205 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது.இந்நூல் பற்றி ஆர்.சுதா மற்றும் எச்.எஸ்.லட்சுமி நாராயணன் என்பவர்கள் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை 1990 இல் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி அரங்கு,திருவனந்தபுரத்தில் வெளியிட்டனர்.ஆனால் இந்த நூலின் தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை.


 இந்த நூலின் சிறப்பு அம்சங்கள் சில

1.தனி மூலிகை தைலங்கள்

2.மூலிகை தைலங்களுடன் ஒன்று இரண்டு சரக்குகள் மட்டும் சேர்க்கப்பட்ட ஏக மூலிகை மருந்துகள்

3.ஏக மூலிகை கசாயங்கள் 

4.ஏக மூலிகை சூரணங்கள் ஆகியவை காணப்படுகின்றன. 


உதாரணமாக,

செம்முள்ளி தைலம் 

இதில் பயன்படும் உறுப்பு 

செம்முள்ளியின் சமூலம்

இதன் பயன் - 

மந்தாரகாசம்,குறை நோய்,புண்,அண்டவாதம்,விஷம் முதலியன.

சித்த மருத்துவ குணபாட துறைக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

இந்நூலினை வெளிக்கொண்டு வர அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

                     நன்றி

உங்கள் அன்பு மருத்துவர் 

இரா. சண்மு 

Comments

Popular posts from this blog

சிவவாக்கியரும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும்-1

அறிவர் மருத்துவத்தில் நாடி -1

கண்ணடைப்பான் -ஒரு சிறு ஆராய்ச்சி.case documentation in siddha medicine