காணாத நூல்கள் -4
அகத்தியர் பெருநூல் 10,000 காணாத நூல்கள் என்ற தலைப்பில் சித்த மருத்துவத்தில் நாம் தொலைத்த நூல்களை பற்றி பார்த்து வருகிறோம். நேரம் இருப்பதை பொருத்தும் அவசியம் கருதியும் பதிவு செய்து வருகிறேன். தற்போது பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்த சிறப்பு பதிவு பொதுவாக சித்த மருத்துவ பொங்கல் சற்று வித்தியாசமாக இருக்கும். உதாரணமாக போகி பண்டிகை அந்த காலத்தில் பழைய நூல்களை எரித்து போக்கினோம். போகி கொண்டாடினோம்.ஆனால் இந்த நவ நாகரிக உலகத்தில் ஓலைச்சுவடிகளை DIGITAL PATENT கொடுத்தும், சித்த மருத்துவ நூல்களை ஆயுர்வேத நூல்களாக மாற்றியும்,வெளிநாட்டிடம் கொடுத்தும் நாம் நம் பாரம்பரிய நூல்களை போக்கி போகி பண்டிகை கொண்டாடுகிறோம். தமிழ் பொங்கல் அதுபோல நம்மில் சிலர் தமிழ் மருத்துவம் பழமை வாய்ந்தது, தமிழ் மருத்துவம் சிறப்பு வாய்ந்தது மனிதர் தோன்றிய காலத்திலே தமிழ் மருத்துவம் தோன்றியது என்று தமிழின் பெருமையை பொங்கி பொங்கி கூறி பொங்கல் கொண்டாடுகிறோம். மாட்டுப் பொங்கல் மாடு தான் என்றாலும் ஒரு போக்கு உண்டு மனிதருக்கோ அவ்வளவும் கிடையாது அப்பா என்பது அகத்தியர் வாக்கு. அதாவது மாடு த...