Siddha literary research in siddha politics -1
TKDL
சித்தர்களின் பாடல்களை பயன்படுத்தி அரசியல் கட்சி தோன்றிய வரலாறு உள்ளது இன்று சித்த மருத்துவத்தை வைத்து அரசியல் (அதாவது இங்கு கூறப்படும் பொருள் சித்த மருத்துவத்தை பற்றி அறியாமையால் நடக்கும் நிகழ்ச்சிகள்).
Tkdl என்ற அறிவுகூடம் பற்றியது தான் இன்றைய பதிவு.
சித்த மருத்துவர்கள்,தாவரவியல் வல்லுநர்,தொல்பொருள் ஆய்வாளர்,ஓலைச்சுவடி ஆய்வாளர்,தாது பொருள் ஆய்வாளர்,மருந்து உற்பனம் செய்வோர் மற்றும் ஒவ்வொரு தமிழரும்,தினம் தினம் சென்று பார்க்க வேண்டிய வலைத்தளம் http://www.tkdl.res.in/tkdl/langdefault/common/Home.asp?GL=Eng
Tkdl ஏன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் இந்திய நாட்டின் மிகப்பெரிய கொள்கை,.எந்த பண்பாட்டு பொருளும் தனி நபரின் பொருளாக கூடாது.அது அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதே அக்கொள்கை.
அதை செவ்வனே செய்ய வேண்டிய பொறுப்பு tkdl சார்ந்தது.
இது ministry of Ayush மற்றும் csir என்னும் இரு அரசு நிறுவனங்கள் கீழ் செயல்படுகிறது.
இதன் முக்கிய வேலை.
1.siddha,ayurveda,unani,yoga,sowa Rigpa ஆகிய மருத்துவ முறைகளின் பாரம்பரிய முறைகளை தனியார் நிறுவனம் உரிமை கொண்டாடுவதை தடுப்பது.
2.இதில் உள்ள ஒவ்வொரு துறையும் தங்கள் மருத்துவ முறைகளில் உள்ள மருத்துவ முறையினை குறியீடு சொற்களாக மாற்றி சேமித்து வைப்பது.
3.முன்னணி சர்வதேச காப்புரிமை அலுவலகங்களான ஐரோப்பியக் காப்புரிமை அலுவலகம் ( ஈபிஓ), ஐக்கிய இராச்சிய வர்த்தக முத்திரை மற்றும் காப்புரிமை அலுவலகம் (யுகேபிடிஓ) மற்றும் ஐக்கிய நாடுகள் காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலகம் ஆகியவற்றுடன் பாரம்பரிய அறிவை உயிரியளவிலிருந்து பாதுகாக்க, சர்வதேச காப்புரிமை பரிசோதனையாளர்களுக்குத் தகவல்களை வழங்குவதற்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. காப்புரிமை தேடல் மற்றும் தேர்வுக்காக tkdl தரவுத்தளத்தில் காப்புரிமை வழங்குவதற்கு முன்னர் இவர்கள் பாரம்பரிய அறிவு எண்ணிம நூலகம் அணுகல் மேற்கொள்வார்கள்.
இவர்கள் அனுமதித்தால் தான் பாரம்பரிய அறிவு விலை போகும்.
இதற்கும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்பது தான் உங்கள் கேள்வி.
இருக்கிறது.,,,
மக்களின் அறியாமை,அரிசயல் செய்ய உதவும் ஆயுதம்.
இதை போக்க எழுந்தவையே உண்மை அறம் சார்ந்த நூல்கள்.
அப்படிப்பட்ட நூல்களை பற்றிய அறிவு இல்லாததால் பல அடிப்படை உரிமை பறிபோகும் நிலை உள்ளது.
1.இதுவரை *200 சித்த மருத்துவ* முறைகள் மற்றுமே தரவுதளத்தில் உள்ளது.
2.*clevira* போன்ற மருந்துகள் ஆயுர்வேத மருந்து என்று விலைபோகிவிட்டது.
3.*அமுக்கரா* போன்ற மருந்துகளை வெளிநாட்டில் patent வாங்க தடை கூறாதது.
4.ccrs என்ற ஆராய்ச்சி நிறுவனம் *D5 சூரணம்* என்ற மாறுபட்ட ஆவாரை குடிநீர் சூரணத்துக்கு patent வாங்க வழிவகை செய்தது.
5.*ஆண்டுவாரியாக*சித்தமருத்துவ நூல்கள் தொகுக்கப்படாதது.
6.சித்த மருத்துவ நூல்களின் *எண்ணிக்கையை குறைவாக* வெளிப்படுத்துவது.
7.*இளநீர் குழம்பு* போன்ற சித்த மருந்துகள் ஆயுர்வேத மருந்து ஆனது.
இவைகளை பற்றி ஆய்வு செய்ய இருக்கிறோம்.இந்த ஆராய்ச்சியில் சித்த மருத்துவ நூல்களின் ஆராய்ச்சி
அறியாமை இருளை அழிக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி
......தொடரும்....
Comments
Post a Comment