Posts

காணாத நூல்கள் -3

  நீராடும் மர்மம் அல்லது ஸ்நான விதி            சித்த மருத்துவம் என்னும் பெயர் இன்னும் நிலைத்திருக்க காரணம் நம்மிடம் உள்ள அறிவு பொக்கிஷம் ஆகிய நூல்களே.            சித்த மருத்துவர்களாகிய நாம் Ancient Wisdom of Siddha Medicine in Preventive & Promotive Health Care என்று அடிக்கடி சித்த மருத்துவம் நோய் தடுப்பு முறையில் சிறந்து விளங்குகிறது என்று தம்பட்டம் அடிக்கிறோம்.              மறுப்பது உடல் நோய் மருந்தெனலாகும் என்று திருமூலரை வாய் வார்த்தைக்கு மட்டும் இழுத்து நோய் தடுப்பு துறைக்கு பயன்படும் மூலமாகிய நூல்களை தொலைத்துவிட்டோம், என்பது தான் நாம் வருந்தத்தக்க விஷயம்.              அப்படி நாம் இழந்த ஒரு நூல் "நீராடும் மர்மம் அல்லது ஸ்நானம் விதி" .இந்நூலினை அப்துல் குதூஸ் ராவுத்தர் பு.நா.வே என்பவர் 1937 அன்று கிரவுன் அச்சியந்திரசாலை,சென்னையில் பதிப்பித்துள்ளார்.இது வெறுமனே 8 பக்கங்கள் உடைய நூல்.ஆனால் நீராடும் விதி என்பது நோய் தடுப்புக்கு மிகவும் அவசியமான ஒரு விதி.என்னுடைய தேடலில் இச்சிறிய நூல் என்னிடம் கிட்ட வில்லை.இந்நூல் பற்றிய தகவல் தெரிந்தால் பகிரலாம்.சித்த மருத்துவ வளர்ச்சிக

காணாத நூல்கள் - 2

கிருமி சிந்தாமணியும் குண தீட்சை மர்மமும் கொரோனா காலத்தில் ஒரு சந்தேகம். கிருமி நோய்கள் பற்றி சித்த மருத்துவ நூல்களில் மருத்துவம் கூறினாலும். தனி நூல் உள்ளதா என்று ஒரு சந்தேகம். ஆம் உள்ளது. கிருமி சிந்தாமணியும் குண தீட்சை மர்மமும் 1909 இல் குஞ்சி பண்டிதர் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. எங்கு உள்ளது? யாருக்கு தெரியும் பல நூல் நிலையங்கள் சென்றும் இப்படி ஒரு நூல் எனக்கும் கிடைக்கவில்லை. பாவம் சித்த மருத்துவ வல்லோருக்கும் கிட்டவில்லை. இந்நூலில் என்ன தகவல் இருக்கும் என்பதும் தெரியவில்லை. இந்த நூல் இருந்திருந்தால் தொற்று காலத்தில் பயன்பட்டிருக்குமோ? இருக்கலாம். நீங்கள் இந்த நூலை கண்டால் கையோடு கொண்டு வாருங்கள். இது siddha microbiology என்ற துறைக்கு கூட நம்மை அழைத்து செல்லலாம். நன்றி உங்கள் அன்பு மருத்துவன் இரா. சண்மு

காணாத நூல்கள் - 1

ரோமரிஷி ஏக மூலிகை வைத்தியம் - -500 சித்த மருத்துவத்தில் மறைந்த நூல்கள் பல. அதை மீட்க காணாத நூல்கள் பற்றி எழுத விழைகிறேன். அதில் முதல் ஒன்று 1.ரோமரிஷி ஏக மூலிகை வைத்தியம் - -500 சித்த மருத்துவத்தில் ஏக மூலிகை பிரயோகம் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. அதாவது ஒரே ஒரு மூலிகை வைத்து நோயை தீர்ப்பது. இதற்கான மூலநூல் தனியாக இல்லை என்பது சித்த மருத்துவ சமூகத்தின் நம்பிக்கை. ஆனால் நாம் அதற்கான நூல்களை தொலைத்து விட்டோம் என்பது தான் உண்மை.  ரோமரிஷி ஏக மூலிகை வைத்தியம் 500 என்ற ஏடு திருநெல்வேலி மாவட்டம் அத்வைதனானந்தர் என்பவரிடம் இருந்து ரீஜனல் ரிசர்ச் சென்டர், ஆயுர்வேதா பெங்களூரை சேர்ந்தவர்கள் சேகரித்து வைத்துள்ளனர்.இதில் மொத்தம் 205 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது.இந்நூல் பற்றி ஆர்.சுதா மற்றும் எச்.எஸ்.லட்சுமி நாராயணன் என்பவர்கள் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை 1990 இல் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி அரங்கு,திருவனந்தபுரத்தில் வெளியிட்டனர்.ஆனால் இந்த நூலின் தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை.  இந்த நூலின் சிறப்பு அம்சங்கள் சில 1.தனி மூலிகை தைலங்கள் 2.மூலிகை தைலங்களுடன் ஒன்று இரண்டு சரக்குகள் மட்டும் சேர்

சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும் நூல்கள் பதிப்பும் - 1

Image
அரசினர் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் உள்ள வற்ம நூல்கள்  அனைவருக்கும் இனிய சித்தர் தின நல்வாழ்த்துக்கள்.💐 சித்த மருத்துவத்தில் நூல்கள் பதிப்பு மிகவும் அவசியமானது. இன்று சித்த மருத்துவத்தின் பிரிவுகள் பல உருவாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் துறை சார்ந்த வளர்ச்சிக்கு நூல்களின் பின்புலம் மிகவும் அவசியமானது.  உதாரணமாக, வற்ம மருத்துவப் பிரிவில் உள்ள திலர்த காலம் பற்றிய புள்ளியை ஆய்வு செய்யும் ஒருவன் முதலில் திலர்த காலம் எந்தெந்த நூல்களில் பேசப்பட்டுள்ளது என்பதை மொத்தமாக தொகுத்த பின்னரே அதில் ஆராய்ச்சி செய்ய ஏதுவாக இருக்கும் .அப்படியானால் திலர்த காலம் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒருவன் வர்ம நூல்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும். அதற்கு முதலில் அந்த நூல்கள் வெளிவந்திருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் வெளிவந்த நூல்கள் வெளி வராத நூல்கள் என்ன என்பது பற்றிய அறிவு இருந்தால் தான் எந்தெந்த நூல்களை பதிப்பிக்க வேண்டும் எங்கே அந்த நூல்களை சென்று பெற வேண்டும் என்று தேட இயலும். வற்ம நூலகள் யாரும் தர மாட்டார்கள் என்று உட்கார்ந்த இடத்திலிருந்து கூவல் செய்யலாம். ஆனால் உண்மை சித்தர் பாடல்கள

காலத்துக்கு பதில் கூறும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சி -1

       அனைவருக்கும் கண்டாரை நோக்கிக் கருத்தோடு நில்லாதவனின் சித்தர்கள் தின நல்வாழ்த்துக்கள் .         இன்று சித்தர் தினம் பல்வேறு சித்த மருத்துவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.         இதில் எனக்கு உண்டான கேள்வி          1.சித்தர்கள் இதனை என்ன கண்ணோட்டத்தில் காண்பார்கள்?.         2.சித்தர் தின கொண்டாட்டத்தை விரும்புகிறார்களா இல்லையா? என்பதுதான் எனது கேள்வி.         முதலில் சித்தர்கள் இக்காலகட்டத்தில் இருக்கிறார்களா? என்பதை அறிவது முக்கியம் . அவர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்று காரைச் சித்தர் பாடலில் கூறியுள்ளார்.                 "பூரணர்கள் மறைந்துள்ளார் அவரை காணே"                   அதாவது சித்தர்கள் போன்ற மனிதர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக மக்களோடு இருப்பார்கள். அவர்களை நம் உண்மையான தேடலின் மூலமாக அறிந்து கொள்ள வேண்டும்.                   மேலும் காரைச் சித்தர்,                   "தூய நெறி காட்டி நின்றார் சித்தர் சித்தர்"                                                                                                    என்று கூறுகிறார்.            

Drug and cosmetics act siddha books to download

Image
  As a kind request from my friends circle, i wish to upload these books in this blog in favour of all doctors and pg scholars as these books are now authenticated to go for further research. I am clear that the books uploaded are non copyrighted.And i wish all my friends to buy all these books and  these books are now for sale in bookshops also. Thank u, Here is a video to understand the siddha books of drug and cosmetics act. U can download the books by clicking the name of the book.After clicking you have been redirected to new page and now u can download it easy and save for further research purpose. 1. agathiar pin 80   2. agathiar chendooram 300 3. agathiar and nagamuni nayanavithi 4. agathiar kanmasoothiram 150 5. agathiar vaithiya vallathi 600 6. agathiar vaithya kandam 600 7. agathiar vaithiya kaviyam 1500 8. athmarakshamrutham 9. balavagadam 10. bogar vaithiyam 700 11. brahmamun karukiddai soothiram 380 12. agathiar paripooranam 400 13. periya vathiya chillarai kovai 14. puli

மருத்துவ காலநெறி ஆராய்ச்சி

Image
  மருத்துவ ஜோதிடம் 2 (மருத்துவ காலநெறி ஆராய்ச்சி) சித்த மருத்துவம் மூடநம்பிக்கைகளை அழித்து உண்மை இயற்கை இயக்கங்களை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையது. விஞ்ஞானம் இயற்கை ஆராயும் வகையில் வேறு யாராலும் ஆராய இயலாது.ஆனால் மெய்ஞ்ஞானம் இயற்கை என்னவென்று ஆராய்ந்து முடித்தது.அதில் ஒன்றுதான் ஜோதிடம். நிலையான ஒன்றை ஆராய்வது மெய்ஞானம் நிலையற்றவை ஆராய்வது விஞ்ஞானம் என்பது அனைவருக்கும் தெரியும். சித்த மருத்துவம் விஞ்ஞானத்தில் விளக்க இயலாத பல விந்தையை வைத்துள்ளது. அதில் ஒன்று தான் காலம்  இந்த தலைப்பு ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானது. சோதிடம் என்பதற்கு பதில் காலநெறி என்ற சொல் உங்களுக்கு விளக்க ஏதுவாக இருக்கும். அகத்தியர் தன் ஞான பாடல் ஒன்றில், மாடு தான் என்றாலும் ஒரு போக்கு உண்டு. மனிதருக்கும் அப்படியும் கிடையாதப்பா என்று கூறுகிறார். இது நெறி என்னும் கோட்பாடுக்கு எடுத்துக்காட்டு. மாடு காலையில் எழுந்து புல்லினை மேய்ந்து வீடு திரும்பும்.இது அதன் போக்கு அல்லது நெறி என்று கூறலாம்.இதன் மூலம் மாடு நாளை என்ன செய்யும் என்பதை கணிக்கலாம். இது போன்ற ஒரு அறிவு தான் "கால நெறி". சூரியன் இன்னும் 10 மணிநேரத்தில்