காணாத நூல்கள் -3

 நீராடும் மர்மம் அல்லது ஸ்நான விதி


           சித்த மருத்துவம் என்னும் பெயர் இன்னும் நிலைத்திருக்க காரணம் நம்மிடம் உள்ள அறிவு பொக்கிஷம் ஆகிய நூல்களே.


           சித்த மருத்துவர்களாகிய நாம் Ancient Wisdom of Siddha Medicine in Preventive & Promotive Health Care என்று அடிக்கடி சித்த மருத்துவம் நோய் தடுப்பு முறையில் சிறந்து விளங்குகிறது என்று தம்பட்டம் அடிக்கிறோம்.

             மறுப்பது உடல் நோய் மருந்தெனலாகும் என்று திருமூலரை வாய் வார்த்தைக்கு மட்டும் இழுத்து நோய் தடுப்பு துறைக்கு பயன்படும் மூலமாகிய நூல்களை தொலைத்துவிட்டோம், என்பது தான் நாம் வருந்தத்தக்க விஷயம்.

             அப்படி நாம் இழந்த ஒரு நூல் "நீராடும் மர்மம் அல்லது ஸ்நானம் விதி".இந்நூலினை அப்துல் குதூஸ் ராவுத்தர் பு.நா.வே என்பவர் 1937 அன்று கிரவுன் அச்சியந்திரசாலை,சென்னையில் பதிப்பித்துள்ளார்.இது வெறுமனே 8 பக்கங்கள் உடைய நூல்.ஆனால் நீராடும் விதி என்பது நோய் தடுப்புக்கு மிகவும் அவசியமான ஒரு விதி.என்னுடைய தேடலில் இச்சிறிய நூல் என்னிடம் கிட்ட வில்லை.இந்நூல் பற்றிய தகவல் தெரிந்தால் பகிரலாம்.சித்த மருத்துவ வளர்ச்சிக்கும் நோயில்லா நெறி துறைக்கும் இந்நூல் பயன்படும் என்பதில் ஐயமில்லை.


நன்றி.

இப்படிக்கு உங்கள் அன்பு மருத்துவன் இரா.சண்மு

Comments

Popular posts from this blog

சிவவாக்கியரும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும்-1

அறிவர் மருத்துவத்தில் நாடி -1