அனுபவ அறிவும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும்-1
மருத்துவத்துறையை பொருத்தமட்டில் நூல்களும் அனுபவமும் இரு கண்கள் ஆகும்.
மருத்துவ முன்அனுபவம் இல்லாமல் சில பாடல்களை பொருள் புரிந்து கொள்வது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் பொருள் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. அனுபவ அறிவு நூல்கள் ஆராய்ச்சிக்கு எவ்வளவு பயன்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
உதாரணமாக, கீழ்க்கண்ட
அகத்தியர் நயனவிதி பாடலை காணலாம்.
மாசுங் கண்ணும் பசித்திருக்கும் மயக்குங் குணங்கள் பலவாகும்
தேசுங் குறையு மருட்சியுண்டாம் திறமாய்க் கருமம் செய்யாது
ஏசுங் குணங்கள் வெள்ளெழுத்து என்றே சொல்லு இவை கண்டே."
இப்பாடலில் முதல் வரி நமக்கு ஆழ்ந்த பொருளினை தரப்போகிறது.
முதல் வரியினை மூன்று விதமாக பிரித்து பொருள் எடுத்துக் கொள்ளலாம்.
ஒன்று
(கூசும் விழியும் புகைந்திருக்கும் குறுகும்)பார்வை தோற்றாது.
இதன் பொருள்:
கண்கள் கூசும்,
கண் புகைந்து காட்டும்,
கண்குறுகும் ( shrinkage of eyes ,may be pthsis bulbi)
பார்வை தெரியாது.
இரண்டு
கூசும் விழியும் புகைந்திருக்கும் (குறுகும்) பார்வை தோற்றாது
இதன் பொருள்:
கண்கள் கூசும்,
கண் புகைந்து காட்டும்,
குறுகும் என்பதை இரு விதமாக பொருள் கொள்ளலாம்.
1.குறுகும் -சுருக்கும் (convergence of light)
2.குறுகும் -நெருங்க செய்தல்(pupil constriction)
1.சுருங்கும் பார்வை தோற்றாது என்னும் பொருள்பட எடுத்துக்கொண்டால், இது refractive error of eye.
2. நெருங்கும் பார்வை தோற்றாது
என்னும் பொருள்பட எடுத்துக்கொண்டால்,இது absence of miosis.
மூன்று
கூசும் விழியும் புகைந்திருக்கும் (குறுகும் பார்வை) தோற்றாது.
இதன் பொருள்
கண் கூசும்
கண் புகைந்து காட்டும்
இதில் குறுகும் பார்வை என்பதை கிட்ட பார்வை என்று எடுத்து கொண்டால் வெள்ளெழுத்தில் கிட்டபார்வை தெரியாது. அதாவது தூரபார்வை (long sightedness) இருக்கும்.
இப்படி 1 வரிக்கே இவ்வளவு பொருள் என்றால் இந்த கண் நோயின் இலக்கணத்தை எப்படி அறிவது?
இங்கு பெரிதும் உதவுவது சித்த மருத்துவரின் அனுபவ அறிவு.நூற்றுக்கும் மேற்பட்ட கண் நோயாளிகளை சந்தித்த ஒரு மருத்துவரால் இதில் தெளிவான முடிவினை கொண்டு வரமுடியும்.தெளிவான விடை தெரிவோர் பதில் அளிக்கலாம்.
எந்த ஒரு அனுபவ அறிவும் இல்லாமல் நூல்களின் ஆராய்ச்சி இல்லாமல் விதவிதமாய் ஆராய்ச்சி அறிக்கைகள் இணையதளத்தில் வெளியிட்டு ஆகும் பயன் என்னவோ?? வெறும் நவீன அறிவியலோடு ஒப்புநோக்கி ஆராய்ச்சியை முடித்துக்கொள்வது சித்த மருத்துவத்தில் இப்போது வாடிக்கையாகி வருகிறது. இது இன்னும் சில காலங்களில் சித்த மருத்துவத்தை வேடிக்கை செய்யும் நிலைமைக்கு கொண்டு வரலாம்.
ஆதலால் அனுபவ அறிவைப் பெருக்கி கண் நோய்கள் மற்றுமின்றி 4448 நோய்களுக்கும் இதுபோல் அனுபவ அறிவின் மூலமாகவும் நூல்கள் ஆராய்ச்சியின் மூலமாகவும் தெளிவான விளக்க உரையுடன் பல நூல்கள் வருதல் வேண்டும். அதன்பின் சித்த மருத்துவ ஆராய்ச்சி சிறக்க வேண்டும். அனுபவ அறிவு, சித்த மருத்துவ நூல் ஆராய்ச்சிக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை இனிவரும் காலங்களில் காணலாம்.
Comments
Post a Comment