சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும் போட்டித் தேர்வுகளும்-1

 

சித்த மருத்துவ  பாடப்புத்தகள் 50 வருடங்கள் ஆகியும் புதுப்பிக்கபடாமல் அதில் உள்ள பிழைகள் திருத்தப்படாமல் இன்னும் சித்தமருத்துவ மாணவர்களால் படிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சித்த மருத்துவ பாடப்புத்தகங்கள், classical text என்று சொல்லக்கூடிய சித்தர் இயற்றிய நூல்கள் அல்லாமல்  சித்த மருத்துவ மாமேதைகளால் பல சித்தர் நூல்களைத் திரட்டி எழுதப்பட்ட நூல்கள் ஆகும். எப்படிப்பட்ட பெரிய அறிவாளிகளாக இருந்தாலும் சிறு சிறு தவறுகள் நேர வாய்ப்புண்டு. அப்படி சித்தமருத்துவ பாடப்புத்தகங்களில் ஆங்காங்கு தவறுகள் இருப்பது வாடிக்கையானது. ஆனால் அது 50 வருடங்கள் ஆகியும் திருத்தப்படவில்லை என்பதே சோகமான ஒரு விஷயம்.

இப்படி திருத்தப்படாமல் இருக்கும் பாடபுத்தகங்களே சித்த மருத்துவ போட்டித் தேர்வுகளுக்கு அடிப்படையானது. நவீன வளர்ச்சியின் காரணமாக சித்த மருத்துவ பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் வெறும் விளக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சித்தமருத்துவ பாடல்களை ஆழ்ந்து படிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது.

 சமீபத்தில் அகில இந்திய பட்டமேற்படிப்பு சித்தமருத்துவர் நுழைவுத்தேர்வு
(AIAPGET) நடந்தது. அதில் கேட்கப்பட்டிருந்த கேள்வி இதற்கு நல்ல உதாரணம். 

சொறி சிரங்குக்கு அரைப்பு என்ன? என்பதே அந்த கேள்வி. இதற்கான விடை நோயில்லா நெறி( டாக்டர் துரைராசன்) நீராடல் பகுதியில் அரைப்பு வகை  என்னும் தலைப்பின் கீழ் உள்ளது. அதில் விளக்கவுரையின் படி ஒரு விடையும் சித்த மருத்துவ நூலான பதார்த்த குண சிந்தாமணி பாடலின் படி ஒரு விடையும்  உள்ளது.


விளக்கவுரை படி

சொறி சிரங்குக்கு-உசிலந்தூள்

இரணங்களுக்கு-இலுப்பை பிண்ணாக்கு




பாடலின் படி

சொறி சிரங்குக்கு- இலுப்பை

இரணங்களுக்கு- உசிலந்தூள்(சீக்கிறான்).


இதில் சித்தர்கள் கூற்றுப்படி பாடலில் உள்ளது சரி.

ஆனால் இதற்கான விடை எது என்பது இணையதளத்தில் இன்னும் சில நாட்களில் வெளிவரும். அதில் பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா? விளக்க உரைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறதா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

                                                             நன்றி


Comments

  1. இதை போன்ற தவறுகள் நிறைய உள்ளன. நஞ்சு முறிவு நூலில் பாலேடு தின்றால் தேன் கொடுக்க பொழிப்புரையில்
    கூறப்பட்டு உள்ளது. ஆனால் பாடலின் படி பாலேடு தின்றால் "பகற் புளித்த மோரதனை வேலாம் விழியாளே விடு" என்று உள்ளது. பொது மருத்துவ நூலில் தமரக நோய் பகுதியில் பல நோய்களால் துன்புற்று உடல் "மெலிந்திறுக்கும் காலையில்" அதாவது மெலிந்திறுக்கும் வேளையில் என்ற விளக்கமே மறுபதிப்பின் போது "காலையில்" உண்டாகும் தமரக நோய் என காலை என்பதை ஒரு குறிப்பிட்ட வேளையாக பதிப்பித்த நிகழ்வு கூட அரங்கேறி உள்ளது என்பது மிகவும் வருந்தத்தக்க விடயம்

    ReplyDelete
    Replies
    1. How to handle this condition in competitive exams?
      Will the key give preferences to siddhar songs or its explanation...?

      Delete

Post a Comment

Popular posts from this blog

சிவவாக்கியரும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும்-1

அறிவர் மருத்துவத்தில் நாடி -1

காணாத நூல்கள் -3