சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும் சித்த மருத்துவ ஆராய்ச்சியும் -1
சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியே. சித்தர்களின் பழம்பெரும் கலைகள் அவற்றின் பெருமைகள் இவற்றுள் எஞ்சியவை, நம் கையில் மிஞ்சியவை இந்நூல்களே. நமக்கு இருக்கும் ஒப்பற்ற பாரம்பரிய அறிவை மற்றும் ஆராய்ச்சியை பறைசாற்றுவது இந்நூல்களே. இந்நூல்களின் அடிப்படைகளை விட்டு ஒருவன் செய்யும் ஆராய்ச்சி சித்த மருத்துவ ஆராய்ச்சி என்று எடுத்துக் கொள்ளப்படாது. ஏனெனில் சித்த மருத்துவ ஆராய்ச்சி, சித்தர்களின் மருத்துவம் ஆகிய சித்த மருத்துவத்தில் மட்டுமே செய்யக்கூடியதாக உள்ளது. அந்த சித்த மருத்துவம் நூல்களாகவும் அனுபவ அறிவாகவும் உள்ளது. மற்றைய ஆராய்ச்சிகள் போல சித்த மருத்துவ ஆராய்ச்சி செய்ய இயலாது. இதில் முதல்படியாக நூல்கள் ஆராய்ச்சியும் ,அதன் வளர்ச்சியாக மருந்துகளின் ஆராய்ச்சியும் அமைவது சிறப்பு. ஆராய்ச்சிக்கு சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் என்பதை இனி வரும் பதிவுகளில் காணலாம்.
மேலும், இதுவரை சித்த மருத்துவ ஆராய்ச்சியில் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சி இல்லாததால் ஏற்பட்ட தவறான ஆராய்ச்சி அறிக்கைகள், சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சி இல்லாததால் சித்த மருத்துவத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு, இவற்றை திருத்திக்கொள்ள ஆராய்ச்சியை தெளிவுபடுத்த எடுக்கவேண்டிய முடிவுகள் ஆகியவற்றை இனி வரும் பதிவுகளில் காணலாம்.
உதாரணமாக சித்தர் யோகம் என்ற தலைப்பில் ஆராய்ச்சி அறிக்கைகள் சமீபத்தில் வெளிவந்தன. இதில் வினோதம் என்னவென்றால் இதுவரை எந்தெந்த சித்தர்கள் யோக பாடல்கள் இயற்றியுள்ளனர் என்றும், யோக பாடல்கள் மற்றும் அதன் தொகுப்பு நூல்கள் வெளிவரும் முன்னரே இத்தகைய ஆராய்ச்சி அறிக்கைகள் உருவாக்குவது, ஆராய்ச்சிக்கு வந்த சோதனையா? இல்லை சித்தர் யோகத்துக்கு வந்த சோதனையா? என்று தெரியவில்லை.
திருமூலரின் யோகம் ஒன்றே பெரிதாக அனைவராலும் பேசப்பட்டாலும், பல சித்தர்களின் யோக முறைகள் நூல்களின் வாயிலாக அறிய வேண்டியுள்ளது. அவற்றை தொகுத்து முதலில் சித்தர்களின் யோகம் என்ற ஒரு தொகுப்பு நூல் வெளிவர வேண்டும். இதன் பின்னரே இதில் ஆராய்ச்சி அறிக்கைகள் வெளிவர வேண்டும்.இதற்கு முதலில் எல்லா ஓலைச்சுவடிகளும் கையில் கிடைக்க வேண்டும் அல்லது கிடைத்த ஓலைச்சுவடிகளை நூல் பதிப்பு செய்ய வேண்டும். அதற்கு முன்பாக செய்யும் ஆராய்ச்சி சுவரில்லாமல் சித்திரம் வரைவது போல் உள்ளது.அறுவகை யோகம் என்று பேசும் சித்தர் யோக பாரம்பரியம் பற்றிய ஆராய்ச்சி சித்தர் யோகத்தை முன்னிலைப்டுத்தலாம்.இவையெல்லாம் நூல்கள் ஆராய்ச்சி மூலம் மட்டுமே சாத்தியம்.
இதிலும் மிகவும் வேடிக்கையானது "siddha oncology" என்று ஆராய்ச்சி செய்வது. ஆராய்ச்சிநல்லது ஆனால் ஒரு சித்தர் அல்லது இரு சித்தர்கள் கூறும் கருத்துக்களை வைத்து சித்தர்கள் கூறும் புற்றுநோயை வடிவமைப்பது பற்றென்று உடைந்துவிடும்.
மேலும் பஞ்சகற்ப குளியல் பொடி review paper.😆
கிட்டத்தட்ட 7 க்கும் மேற்பட்ட நூலாதரங்களுடன், வெவ்வேறு செய்முறை களுடன் வெவ்வேறு அனுபானம் உடன் வெவ்வேறு வழக்கு முறையுடன் வெவ்வேறு நபர்களால் கூறப்பட்டுள்ளது, பஞ்சகற்ப குளியல் முறை .ஆனால் அண்மையில் வெளிவந்த ஆராய்ச்சி வெளியீட்டில் பதார்த்த குண சிந்தாமணி நூலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரே ஒரு பாடலை வைத்து மட்டும் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.இதற்கு முன்னோடியாக இருக்கும் அனைத்து நூல் ஆதாரங்களை அடிப்படையாக வைத்து செய்திருந்தால் அல்லவா இது ஆராய்ச்சியாக இருந்திருக்கும்.
இதுபோல் பல.
இவற்றை இனி வரும் காலங்களில் காணலாம். ஒவ்வொரு ஆராய்ச்சி வெளியீட்டையும் சித்த மருத்துவ நூல் ஆராய்ச்சி என்னும் கண்ணோட்டத்தில் வைத்து காண இருக்கிறோம். தவறுகளை சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள செய்வோம்.
Yes,this is the proper scientific approach.I support Ur idea
ReplyDeleteThank u sir💐
Delete