சித்த மருத்துவத்தில் எண்களின் முக்கியத்துவம்
சித்த மருத்துவத்தில் எண்களின் முக்கியத்துவம்
சித்த மருத்துவத்தில் சில முக்கிய எண்களை திரும்பத் திரும்ப நாம் கேள்விப்பட்டிருப்போம்.
உதாரணமாக
எட்டுக்கு
எண்வகை தேர்வு
அட்டாங்க யோகம்
எண்பெரும் சித்திகள்
முப்பத்திரண்டு
உள்மருந்து 32
வெளிமருந்து 32
அறுபத்து நான்கு
64 வகை யோகம்
64 வகை சித்தி
64 கலைகள்
தொண்ணூற்றாறு
96 தத்துவம்
96 தொடுவர்மம்
ஏன் இந்த எண்கள் முக்கியத்துவம் வாய்ந்தது.
இவையெல்லாம் வகைப்படுத்தியது யார் என்று பார்த்தால் சித்தர்கள்,யோகிகள் முனிவர்கள், ரிஷிகள் போன்றவர்கள்.
ஒரு விடயத்தை பாமரர் வரை புரிய வைக்க அவர்களுக்கு புரியும் சொல்லோ, பொருளோ கொண்டு உணர்த்த வேண்டியுள்ளது. அவ்வாறு மக்கள் அனைவரிடமும் இருக்கும் ஒரே பொருள் அவர்களுக்கு இயற்கை அளித்த அந்த உடல்.
மேலும், சித்தர்கள் உடம்புக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள்.
உதாரணமாக,
திருமூலர்,
உடம்மை ஊர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்று கூறுகிறார்.
கண்களால் காணக்கூடிய ஒன்றை கொண்டு காணமுடியாததை கருதல் என்னும் அளவை மூலம் அறிய அறிவிக்க உதித்தது தான் இந்த எண்கள்.
இந்த பகுதியில் எட்டை மட்டும் எடுத்து கொள்வோம்.
நம் உடலில் எட்டு உறுப்புகள் உள்ளது.அவை
தலை -1
கை - 2
கால் - 2
காது - 2
மெய் (அல்லது) மார்பு - 1
இவைகள் உடம்பின் அஷ்ட அங்கங்கள் எதாவது 8 அங்கங்கள் என கூறப்படுகிறது.
இப்போது அஷ்டாங்க யோகத்துக்கு வருவோம்.
மக்களுக்கு சில விடயங்களை புரிய வைக்க அல்லது அவர்களுக்கு கலை கற்கும் ஆர்வத்தை தூண்ட சில உயர்ந்த அழகிய வார்த்தைகள் பயன்படுத்த வேண்டியுள்ளது.
அப்படி வந்தது தான் அட்டாங்க யோகம்.
உண்மையில் ஒரு காலம் வரை யோக முறையை விரும்பி பயிலும் சமூகம் இருந்தது. அப்போது அறுவகை யோகம் மட்டுமே இருந்திருக்க முடியும். அகத்தியர் நூல் பலவற்றுள் இயமம், நியமம் தவிர்த்து அறுவகை யோகம் மட்டுமே கூறப்பட்டுள்ளது.
மக்களுக்கு இக்கலையை கொண்டு செல்லும் உயரிய நோக்கத்தில்,
"தம்பி உன் உடம்பில் 8 உறுப்புகள் உள்ளதள்ளவா அது போல யோக முறையிலும் எட்டு உறுப்புகள் உள்ளதப்பா "
அது தான்
இயமம்
நியமம்
ஆசனம்
பிராணாயாமம்
பிரத்தியாகாரம்
தாரணை
தியானம்
சமாதி
என்று கூறினர் போலும்.
இவை போலவே 32, 64 , 96 என்ற எண்கள் உடலினை மையமாக வைத்து புரித்து கொள்ளும் பொருட்டு வகைப்பாட்டுக்கு பயன்பட்டன என்பது குறிப்பிடபடத்தக்கது.
நன்றி
இப்படிக்கு உங்கள் அன்பு மருத்துவன்
இரா.சண்மு

Comments
Post a Comment