சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியே. சித்தர்களின் பழம்பெரும் கலைகள் அவற்றின் பெருமைகள் இவற்றுள் எஞ்சியவை, நம் கையில் மிஞ்சியவை இந்நூல்களே. நமக்கு இருக்கும் ஒப்பற்ற பாரம்பரிய அறிவை மற்றும் ஆராய்ச்சியை பறைசாற்றுவது இந்நூல்களே. இந்நூல்களின் அடிப்படைகளை விட்டு ஒருவன் செய்யும் ஆராய்ச்சி சித்த மருத்துவ ஆராய்ச்சி என்று எடுத்துக் கொள்ளப்படாது. ஏனெனில் சித்த மருத்துவ ஆராய்ச்சி, சித்தர்களின் மருத்துவம் ஆகிய சித்த மருத்துவத்தில் மட்டுமே செய்யக்கூடியதாக உள்ளது. அந்த சித்த மருத்துவம் நூல்களாகவும் அனுபவ அறிவாகவும் உள்ளது. மற்றைய ஆராய்ச்சிகள் போல சித்த மருத்துவ ஆராய்ச்சி செய்ய இயலாது. இதில் முதல்படியாக நூல்கள் ஆராய்ச்சியும் ,அதன் வளர்ச்சியாக மருந்துகளின் ஆராய்ச்சியும் அமைவது சிறப்பு. ஆராய்ச்சிக்கு சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் என்பதை இனி வரும் பதிவுகளில் காணலாம். மேலும், இதுவரை சித்த மருத்துவ ஆரா...